“மனைவி, 3 பிள்ளைகளை அதனால் தான் கொன்னேன்…” சாமி தரிசனம் செய்துவிட்டு ஹோட்டலில் ஜாலி…! வசமாக சிக்கிய கொலையாளி…. வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

By Devi Ramu on புரட்டாதி 14, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது சொந்த மனைவி மற்றும் 3 பிஞ்சு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ராஹுல் என்பவனைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 4 பேரைக் கொடூரமாகக் கொன்ற பிறகு ஜெய்ப்பூரிலிருந்து தப்பிய அந்தப் பாதகன், காடு ஷியாம்ஜி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு விடுதியில் தங்கியுள்ளார்..

கையிலிருந்த பணம் தீர்ந்த பிறகு, தான் அணிந்திருந்த மோதிரத்தை விற்க முயன்றபோது விடுதி உரிமையாளர் அதை வாங்க மறுத்துள்ளார். இதையடுத்து ரிங்காஸ் பகுதிக்கு வந்து முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு சுற்றித் திரிந்த கொலையாளி ராஹுலின் இருப்பிடத்தைச் சிறப்பு போலிஸ் படை கண்டறிந்து வளைத்துப் பிடித்தது.

   

அவரை கைது செய்வதற்காக போலிஸார் ரூ. 25,000 வெகுமதி அறிவித்த அடுத்த ஒரே நாளில் அவர் போலிஸ் வலையில் சிக்கியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், கடும் கடன் சுமையில் மூழ்கியிருந்ததால் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக அவன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.