“வீட்டில் சிக்கிய ஆபாசப் படங்கள் மற்றும் ஆணுறைகள்…” 30 பெண்களுடன் உல்லாசம்… கர்நாடகாவையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 1, 2026

Spread the love

கர்நாடக மாநிலத்தில், ஆன்லைன் மூலமாக வேலை தேடும் பெண்களை இலக்காக வைத்துப் பெரும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஈரண்ணா படிகர் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தான் வாங்கிய கடனை அடைப்பதற்காகப் பல குறுக்கு வழிகளைக் கையாண்ட இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகப் பொய் வாக்குறுதி அளித்துள்ளார். இதை நம்பி வந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணத்தைப் பறித்ததோடு, அவர்களை ஏமாற்றி உல்லாசமும் அனுபவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈரண்ணா படிகரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, பெண்களின் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் மற்றும் ஏராளமான ஆணுறைகளைக் கைப்பற்றினர். ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.