வெளுத்து வாங்கிய மழை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தூக்கத்திலேயே மண்ணுக்குள் சமாதியான குடும்பம்… அசாமில் கோர விபத்து…!!

By Gayathri on புரட்டாதி 1, 2026

Spread the love

அசாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த மதஹரியா என்ற மலைவாழ் கிராமத்தில் நேற்று இரவு பயங்கர கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் எதிர்பாராத விதமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தின் விளைவாக அங்குள்ள ஒரு வீடு முற்றிலுமாக மண்ணில் புதைந்து நாசமானது.

இந்த கோர விபத்தில், வீட்டிற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்களது மகன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், இந்த துயர சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.