கோவிலில் கேட்ட வித்தியாசமான சத்தம்…. தலைத்தெறிக்க ஓடிய மர்ம நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

By Devi Ramu on ஐப்பசி 16, 2025

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேருந்து நிலையம் அருகே புகழ் பெற்ற ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 2 மணிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார் கோவிலுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கோவிலுக்குள் வித்தியாசமான சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நைசாக கோவிலுக்குள் நுழைந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் உண்டியலை உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் தெற்கு கழுகுமலை பகுதியைச் சேர்ந்த கோமதிநாயகம் என்பது தெரியவந்தது. 45 வயதான கோமதிநாயகம் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சரியாக வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட கோமதிநாயகம் பணத்தை திருட முயற்சி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.