கட்டிப் பிடிச்சது ஒரு குத்தமா?.. திருமணத்தை திடீரென நிறுத்திய இளம்பெண்… ரூ.3.73 லட்சம் சன்மானம்.. அதிர்ந்து போன இளைஞர்…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

சீனாவில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இளம் பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமான நிலையில் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற தேதி குறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அப்போது மணப்பெண்ணுக்கு 24 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் இளம் பெண் திடீரென்று திருமணத்தை வேண்டாம் என்று கூறி நிறுத்தியுள்ளார்.

காரணம் மாப்பிள்ளை குறைவாக சம்பாதிப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இருந்தாலும் அந்த வாலிபரின் குடும்பத்தினர் இளம்பெண்ணிடம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு கேட்டும் அவர் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரின் சார்பாக வழங்கப்பட்ட 24.85 லட்சம் பணத்தை திரும்ப வழங்கும் படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம் பெண் ஒப்புக்கொண்டார். ஆனால் தன்னை கட்டி பிடித்ததற்கு 30,000 யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் 3,73,070) கட்டணமாக வேண்டும். இதனால் 2.73 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை தருகிறேன் என கூறியுள்ளார்.

   

ஆனால் இதற்கு அந்த வாலிபரின் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. இளைஞர் விருப்பப்பட்டு கட்டிப்பிடிக்கவில்லை, போட்டோ சூட் எடுத்த போது போட்டோகிராபர் கேட்டதால் கட்டிப்பிடித்தார். இதனால் முழு பணத்தையும் தர வேண்டும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து இறுதியாக அந்த இளம் பெண் குடும்பத்தினரிடம் முழு பணத்தையும் வழங்க சம்மதம் தெரிவித்தார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.