தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மகளிர் உரிமைத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி 1.14 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் பல மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் எனவும் உதயநிதி அறிவித்துள்ளார்.
