வில்லனாக நடிக்க அழைத்த தெலுங்கு தயாரிப்பாளர்.. தக் லைஃப் ரிப்ளை கொடுத்த நடிகர் மம்மூட்டி..

By vinoth

Updated on:

மலையாள சினிமாவின் கொடுமுடிகளாக கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றனர் மம்மூட்டியும் மோகன்லாலும். கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களாகக் கொடுத்த மம்மூட்டி தற்போது அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார். சமீபத்தில் ரிலீஸான அவரின் ப்ரமயுகம் படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கலக்கிவருகிறது.

தற்போது 73 வயதானாலும் கொஞ்சம் கூட அசராமல் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தமிழிலும் பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருந்தது. இதுவரை 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இப்போதும் வருடத்துக்கு 5 படங்கள் அளவுக்கு நடிக்கிறார்.

   

தமிழ் தாண்டி பிறமொழிகளில் மம்மூட்டி நடிக்கிறார். ஆனால் இயக்குனர்கள் சொல்லும் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே அதில் நடிக்க ஒப்புக்கொள்வார். அந்த வகையில் தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்தின் படம் ஒன்றில் நடிக்க அனுகிய போது மாஸான பதிலைக் கொடுத்துள்ளார்.

பவண் கல்யாணின் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்த அல்லு அரவிந்த் அந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தில் மம்மூட்டியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளார். அதற்காக மம்மூட்டிக்கு போன் செய்து “சார் நான் பவன் கல்யாணை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அதில் ஒரு சிறப்பான வில்லன் கதாபாத்திரம் உள்ளது. அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

அதைக் கேட்ட மம்மூட்டி “நல்ல கதாபாத்திரமா?… அப்படியானால் ஏன் நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிரஞ்சீவியைக் கேட்கவில்லை” எனக் கேட்டுள்ளார். அதற்கு ‘அவர் அந்தமாதிரி வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டார்’ எனக் கூறியுள்ளார் அரவிந்த். இதைக் கேட்ட மம்மூட்டி “அப்ப நான் மட்டும் ஏன் நடிக்க வேண்டும்” என ஒரு தக் லைஃப் பதிலைக் கொடுத்து தான் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் என சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்த தகவலை அல்லு அரவிந்தே ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டுள்ளார்.