மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிகில் முகர்ஜியின் மகளுமான பிரிஷ்டி முகர்ஜி (28), பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர்ஹாட் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரிஷ்டி முகர்ஜியின் இந்த முடிவுக்கு பணி இழப்பால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமே காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். போல்புர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியாளராகப் பணியாற்றி வந்த அவர், கடந்த சில மாதங்களாகவே வேலை இழப்பு காரணமாக மனரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன் மூலம் முறைகேடாக நியமிக்கப்பட்ட சுமார் 26,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகுதியிழந்த பணியாளர்களின் பட்டியலில் பிரிஷ்டி முகர்ஜியின் பெயர் 608-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய திடீர் பணி இழப்பும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அழுத்தமுமே இளம் பெண்ணான பிரிஷ்டியை தற்கொலைக்குத் தள்ளியதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல் துறையினரின் முழுமையான விசாரணைக்குப் பிறகே இதன் பின்னணியில் உள்ள உண்மை நிலவரம் தெரியவரும்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…