அமைச்சரவையில் திடீர் தூக்கல்…. வெளியேற்றப்படும் முக்கிய முகங்கள்… கோட்டைக்கு போன அந்த ஒரு லிஸ்ட்… முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு….!

Spread the love

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 8-ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில், முதல்வர் விஜய் தனது அமைச்சரவையை விரிவாக மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் பர பரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படாத மற்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சில அமைச்சர்களைப் பதவியிலிருந்து முற்றிலும் விடுவித்துவிட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வர் ஆலோசித்து வருகிறார். அதே நேரத்தில், அமைச்சரவையின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் பல முக்கிய அமைச்சர்களின் இலாகாக்களும் கைமாறவுள்ளன.

முக்கிய மாற்றமாக, தொழில்துறையைக் கவனித்து வந்த அமைச்சர் கீர்த்தனா, அவ்வளவு பெரிய துறையைக் கையாள்வதில் சிரமப்பட்டு வருவதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அம்மாற்றம் செய்யப்படவுள்ளது. மாநிலத்தின் முதலீடுகளை ஈர்க்கும் மிக முக்கியமான தொழில்துறையை ஆதவ் அர்ஜூனாவிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பதிலுக்கு கீர்த்தனாவிற்கு மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட பரிசீலிக்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனிடமிருந்து அத்துறை பறிக்கப்படவுள்ள நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஸ்க்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

துறைகள் மாற்றப் பட்டியலில் போக்குவரத்து மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளும் முன்னணியில் உள்ளன. தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி விமர்சனங்களைச் சந்தித்து வரும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபனிடமிருந்து அத்துறை பறிக்கப்பட்டு, கூட்டுறவுத் துறை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, தற்போது செய்தி மற்றும் திரைப்படத் துறைகளுடன் பள்ளிக் கல்வித் துறையையும் கவனித்து வரும் ராஜ்மோகனிடமிருந்து, பள்ளிக் கல்வித்துறை தனியாகப் பிரிக்கப்பட்டு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் வசம் ஒப்படைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

இதுதவிர, கனிம வளத்துறை அமைச்சராக இருக்கும் பிரபுவிற்கு பால் வளத்துறையும், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகிய இருவருக்கும் இடையே துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், போதைப்பொருள் பயன்பாடு குறித்த காரசாரமான புகார்களை எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவை வரை எழுப்பியிருப்பதால், அமைச்சர் கில்லி சரத்குமார் அமைச்சரவையிலிருந்து முற்றிலும் நீக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை முடிந்தவுடன் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்த்தலை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

3 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

3 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 மணத்தியாலங்கள் ago