நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மல்லி பூ’ பாடல் ஷூட்டிங் நடந்து முடிந்தவுடன் அதனை அவர்கள் கொண்டாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இவர்களின் வெற்றிக் கூட்டணி இது மூன்றாவது தடவை. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிழைப்புக்காக மும்பை சென்று அங்கு படும் கஷ்டங்களும், பின்னர் அவரே ஒரு பெரிய கேங்ஸ்டர் ஆக உருவாகுவதும் இப்படத்தின் கதைக்களமாக உள்ளது. இப்படம் இரண்டு பாகமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல தற்போது முதல் பாகம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு மாபெரும் வரவேற்பு இருந்தது. அதேபோல படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது .
இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மல்லி பூ பாடல்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது மல்லி பூ பாடல் ஷூட்டிங் முடிந்தவுடன் சிம்பு மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் இருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக….