நாய்க்கடியிலிருந்து தப்பிக்க ஒரு புது வாகனம்…. கேரளாவில் சேட்டன் ஒருவர் செய்த சேட்டை…. வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

தற்பொழுது தெருநாய்க்கடிகள் அதிகம் இருப்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள கேரளாவை சேர்ந்த ஒருவர் வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிகடவு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர் இவர் தெரு நாய் கடையில் இருந்து தப்பிக்க இரும்பு கிரில்களால் ஆன வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார். அதனை நகர்த்திக் கொண்டே 62 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்து வருகிறார்.

   

தெரு நாய் கடியிலிருந்து தப்பிக்க அவர் நூதன முறையில் இவ்வாறு போராட்டத்தில் இறங்கியுள்ளார். தெரு நாய்களை கவனிக்காத கேரளா அரசை கண்டிக்கும் வகையில் அவர் இந்த நூதன போராட்டத்தை நடத்தி வருகிறார். நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இதை அரசாங்கம் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.