‘அமல்’ அகதிச் சிறுமியின் பொம்மை நியூயார்க் வருகை… அகதி சிறுமிகளின் துயரங்களை உலகுக்கு எடுத்து சொல்லும் முயற்சி….வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள ஹேண்ட்ஸ்பிரிங் பப்பட் நிறுவனத்தால் இந்த பொம்மை கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கரும்பு மற்றும் கார்பன் ஃபைபர் போன்ற இலகுரக பொருட்களால் ஆனது, பல்வேறு நிலைகளில் மக்கள் நீண்ட காலத்திற்கு அதை இயக்க முடியும்.

ஐரோப்பம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள லிட்டில் அமல் பொம்மை தற்போது அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க் வந்தடைந்துள்ளது. சிரிய அகதிகள்  அடையும் துயரத்தை உலகுக்கு எடுத்துரைக்க தனியார் நிறுவனம் ஒன்று ‘அமல் ‘என்ற 10  வயது 12 அடி பொம்மையை வடிவமைத்துள்ளது. நான்கு பொம்மலாட்டக் கலைஞர்களால் இயக்கப்படும் இந்த பொம்மை அமல்.

   

ஜூலை மாதம் துருக்கியில் இருந்து தனது 8000 கிலோ மீட்டர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி என பல்வேறு நாடுகள் வழியாக பயணித்த இந்த அமல் பொம்மை தற்பொழுது அமெரிக்காவின்  நியூயார்க் நகரை  வந்தடைந்துள்ளது. அங்கு அந்த பொம்மைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரபியில் அமல் என்றால் அகதி  என்று கூறப்படுகிறது. சிரிய நாட்டு அகதிகளின் நிலைமையை விளக்குவதற்காக இந்த பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 17 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவில் தங்கியுள்ளது. அங்கு அமல் பொம்மை பகுதிகளை அகதிகளை சந்தித்து வருகிறது.

அகதிகள் படும் கஷ்டங்களையும் எடுத்துரைத்து வருகிறது இந்த அமல்  பொம்மை நியூயார்க் நகரில் உள்ள தலைவர்கள், குழந்தைகள் போன்றோரை சந்தித்து தனது அம்மாவை தேடுவதாக படைப்பாளர்கள் கூறியுள்ளார்கள். தற்பொழுது இந்த லிட்டில் அமல் பொம்மையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.