CINEMA
மாடர்ன் டிரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்த தங்கலான் நாயகி.. ஹாட் கிளிக்ஸ்..!!
நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான பட்டம் போலெ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படத்திலும் மாளவிகா மோகனன் நடித்தார். பாலிவுட்டில் யுத்ரா என்ற படத்திலும் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
அடுத்ததாக பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் என்ற படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக செய்திகள் உலா வருகிறது. இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படத்திலும் மாளவிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் மாளவிகா மோகனன் வரும் காட்சிகள் சிவப்பு நிறமாக இருக்கும்.
இதனால் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் தனது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிகப்பு நிறங்களிலேயே மாளவிகா புடவை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் மார்டன் உடையில் மாளவிகா பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.