CINEMA
ஒரு பாடலுக்காக பாடாய் படுத்திய T ராஜேந்தர்… ஆளை விட்டால் போதும் என்று தெறித்து ஓடிய SPB…
TR என்று அழைக்கப்படும் விஜய் தேசிங்கு ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவின் தந்தை ஆவார். மகிழ்ச்சியான ரைமிங் வாக்கியங்கள் இடைவிடாத ராப்பிங் செய்வதாலும் டி ராஜேந்தர் பிரபலமானவர்..
தமிழ் சினிமாவில் நடிகராகவும் நடித்துள்ளார் டி ராஜேந்தர். எந்த ஒரு நடிகையையுமே தொட்டு நடிக்காதவர் என்ற பெயரை பெற்றவர் டி ராஜேந்தர். 1980களில் இவர் இயக்கி நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது மட்டும் இல்லாது இவர் இயக்கும் படங்களில் பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து வைப்பார் டி ராஜேந்தர்.
அதன்படி டி ராஜேந்தர் இயக்கிய படம் தான் மைதிலி என்னை காதலி. 1986 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீவித்யா, அமலா, ஆகியோர் அறிமுக நாயகிகளாக நடித்தனர். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் டி ராஜேந்தர் எழுதியிருப்பார். அப்படி அவர் எழுதிய பாடலில் ஒன்று நாளும் உந்தன் உறவை என்ற பாடல். இந்த பாடலை பாடி முடிப்பதற்குள் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களை ஒரு வழி ஆக்கிவிட்டார் டி ராஜேந்தர். அப்படி அவர் என்ன செய்தார் என்பதை இனி காண்போம்.
மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் இறுதியாக வரும் பாடல் நானும் உந்தன் உறவை என்ற பாடல். இந்த பாடலுக்கான வரிகளை எழுதிவிட்டு எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களை பாடுவதற்காக ஸ்டுடியோவுக்கு வர சொல்லி இருந்தார் டி ராஜேந்தர். இந்த பாடலை பாடுவதற்காக மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை எஸ்பி பாலசுப்ரமணியம் கால்ஷீட் கொடுத்திருந்தார். அப்போது அங்கு வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல் வரிகளை வாங்கி படித்துவிட்டு ரிகர்சல் செய்தார். அப்போது ஒவ்வொரு முறை எஸ்பிபி அந்த பாடலை பாடும்போதும் இல்லை இன்னும் கொஞ்சம் மாத்துங்க இல்லை இன்னும் கொஞ்சம் மாத்துங்க என்று கூறி மறுபடி மறுபடியும் பாட வைத்திருக்கிறார் டி ராஜேந்தர்.
இப்படி மாறி மாறி எஸ்பிபி பாடி அவருடைய கால்ஷீட் டைம் முடிஞ்சு இரவு 12 மணி ஆகிவிட்டது. ஒரு வழியாக எஸ் பி பி யும் பாடி முடித்துவிட்டார். அப்போது இன்னொரு தடவை கூட போலாமா என்று டி ராஜேந்தர் கேட்டிருக்கிறார். உடனே எஸ்பிபி அய்யய்யோ என்னால முடியாது நீங்க இன்னொருவாட்டி நான் பாடுனதை கேட்டு பாருங்க. இதுல ஏதாவது உங்களுக்கு மாத்தணும்னு தோணுச்சுன்னா நாளைக்கு நான் மறுபடியும் வரேன் நம்ம ரெக்கார்டிங் வச்சுக்கலாம். இப்ப நான் இன்னும் பாடினா என்னுடைய குரல் போயிடும் என்று சொல்லி ஆள விட்டால் போதும் என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார் எஸ்பிபி.