தற்பொழுது பொதுவாகவே திரையுலகில் தற்கொலை என்பது அதிகமாகி விட்டது என்றே கூறலாம். பிரபல சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நம்மில் பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப்போல பல நடிகைகளும், நடிகர்களும் மன அழுத்தம் மற்றும் அதிக கடன் பிரச்சனையால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து வருகின்றனர். அந்த வகையில் 35 வயதான பிரபல மலையாள சீரியல் நடிகையான ரெஞ்சுஷா மேனனின் தற்கொலை திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரெஞ்சுஷா மேனன் மலையாளத்தில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் . முதலில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமான ரெஞ்சுஷா, பின்னர் சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். ‘ஸ்திரீ’, ‘நிழலாட்டம்’, ‘மகளுடே அம்மா’, ‘பாலாமணி ஆகிய சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் ரெஞ்சுஷா மேனன்.
அதேபோல் சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு சினிமாவிலும் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘மேரிக்குண்டொரு குஞ்சாடு’, ‘பம்பாய் மார்ச்’, ‘கார்யஸ்தான்’, ‘ஒரு வழி டிக்கெட்’, ‘அத்புத த்வீபு’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சீரியல், சினிமா என இரண்டிலும் எப்போதுமே பிஸியாகவே வலம் வந்துள்ளார்.
அவரது கணவரும் சீரியல்கள், திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ரெஞ்சுஷா மேனன். இதுகுறித்து திருவனந்தபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக தான் ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது இந்த திடீர் மரணம் தற்பொழுது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…