அப்படியே மாறிய வினாத்தாள்.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் மெகா குளறுபடி.. அதிகாரியைச் சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள்.. தேர்வு மையத்தில் திடீர் பரபரப்பு..!!

Spread the love

தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் துறை மாறுதலுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) நடத்தி வருகிறது. கடந்த மே 30-ஆம் தேதி தொடங்கிய இத்தேர்வுகள் நேற்று வரை நடைபெற்றன. இதில் திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 157 பேர் தேர்வு எழுதினர். நேற்று நடைபெற்ற தேர்வின்போது, ‘வினாத்தாள் எண் 152’ வழங்கப்பட வேண்டிய தேர்வர்களுக்கு ‘வினாத்தாள் எண் 137’-உம், ‘137’ பெற வேண்டியவர்களுக்கு ‘152’-உம் என வினாத்தாள்கள் முற்றிலும் மாற்றி வழங்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்வு முடிவடைந்த பிறகே இந்த வினாத்தாள் குளறுபடி தேர்வர்களுக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும், தங்களின் பதவி உயர்வு வாய்ப்புகளும், பணிவாழ்க்கை முன்னேற்றமும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் என கவலை தெரிவித்தனர். இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்வு மையத்தில் இருந்த டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து வெளியேற முயன்ற அதிகாரி ஒருவரை தேர்வர்கள் தடுத்து நிறுத்தி கேள்விகளை எழுப்பியதால் தேர்வு மையத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆவேசமடைந்த தேர்வர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் குறித்தும், இந்த குளறுபடிக்கு டி.என்.பி.எஸ்.சி-யே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தங்களது புகார்களை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னரே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் திருவள்ளூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago