“மாணிக்கம் தாகூரின் எம்.பி பதவிக்கு ஆபத்தா?”… விஜயகாந்த் மகன் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. ஜூலை 9-ல் நடக்கப்போவது என்ன….?

Spread the love

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து, மாணிக்கம் தாகூர் தனது தேர்தல் வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை மறைத்ததாகவும், தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி, அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி விஜய பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தரப்பில் ஒரு இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஜய பிரபாகரன் தன் மீது சுமத்தியுள்ள சில குற்றச்சாட்டுகளை வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்தல் வழக்கையே முழுமையாகத் தள்ளுபடி செய்து நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும், குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியும் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி, அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, விருதுநகர் தொகுதி தேர்தல் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூரின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த முக்கிய வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக விருதுநகர் தொகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

1 மணத்தியாலம் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

1 மணத்தியாலம் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago