” இலவச மருத்துவப் பரிசோதனை, குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி…” சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்புகள்…!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2026

Spread the love

தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்டார். பொதுமக்களுக்குச் சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலமாக இருசக்கர வாகனம், இலகு ரக மற்றும் கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் வழக்கம் போல ஆண்டுக்கு 3,000 பேருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 42,114 ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக முழுச் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 13,490 அரசுப் பேருந்துகளில் நிகழ்நேரக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் ரூ.17.99 கோடி செலவில் பொருத்தப்படவுள்ளன. நிலுவையிலுள்ள 5,665 மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ரூ.500.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 9,536 புறநகர்ப் பேருந்துகளில் உள்ள சரக்கு வைக்கும் இடங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துச் சேவையை அறிமுகப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.