“வெள்ளை பேரழிவை தொடர்ந்து  5.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…” பீதியில் உறைந்த நேபாள மக்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2026

Spread the love

நேபாள நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவல்படி, தலைநகர் காத்மாண்டில் இருந்து வடமேற்கே 375 கி.மீ தொலைவில் உள்ள லோமந்தாங் பகுதியைக் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதன்காரணமாக மனாங், டோல்பா, மியாக்டி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 26 அன்று இமயமலையில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உருகி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 5,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்த வெள்ளப் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், தற்போது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால் நேபாள மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்