தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திரைக்கு முன்பும் பின்பும் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் கட்சி தாவல் நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கும் திமுகவிலிருந்து அதிமுகவிற்கும் கட்சி மாறி வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் எம்பியும், அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் இன்னும் சற்றுநேரத்தில் திமுகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சியானது இரண்டாக உடைந்தபோது ஓபிஎஸ் பக்கம் இருந்த அவர், பின்னர் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு பாஜகவில் இருந்து விலகி கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் எடப்பாடி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணையவிருக்கிறார்.
