பெரும் பரபரப்பு..! தெருநாய்கள் தீர்ப்பை எதிர்த்து போராட்டம்… விலங்கு உரிமை ஆர்வலரை கொடூரமாக தாக்கும் பெண் போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on ஆவணி 13, 2025

Spread the love

டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் பெண் விலங்கு உரிமை ஆர்வலரை பேருந்திற்குள் அடிப்பது போன்ற அதிர்ச்சிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான அந்த வீடியோவில், பேருந்திற்குள் சில பெண் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதையும், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையும், அதன் பிறகு காவல்துறை அதிகாரி அந்தப் பெண்ணை அறைந்து அடிக்கத் தொடங்குவதையும் பார்க்க முடிகிறது. பெண் காவல்துறை அதிகாரி அந்தப் பெண்ணை பேருந்திற்குள் தள்ளிவிடுகிறார். பின்னர் அந்தப் பெண் காவல்துறையினரை தாக்க முயற்சிக்கிறார்.

டெல்லி-என்.சி.ஆர்-லிருந்து தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் வீதிகளில் இறங்கி தங்கள் எதிர்ப்பைப் பதிவு  செய்து வருகிறார்கள்.  அந்தவகையில் வைரலாகும் இந்த வீடியோவில் பேருந்திற்குள் காணப்படும் பெண்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகப் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விலங்கு உரிமை ஆர்வலர்கள் என்றும் கூறப்படுகிறது.