ஒருவர் இறந்துப்போனால் அவர் மறுபிறவியாக வேறொரு இடத்தில் ஜென்மம் எடுப்பார் என்று புராண வழக்குகளில் கூறுவது உண்டு. இந்த மறுபிறவியை அடிப்படையாக வைத்து இந்தியாவிலும் சரி உலகளவிலும் சரி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவம். மகாத்மா காந்தியே சாட்சியாக இருந்த ஒரு மறுபிறவி சம்பவம்!!
நவம்பர் 11 1926 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த பெண் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தைக்கு சாந்தி தேவி என்று பெயரிடுகின்றனர். சாந்தி தேவி 4 வயதை பூர்த்தியடைந்தபோது “இது என் வீடு இல்லை, இது எனது ஊர் இல்லை. மதுராதான் என்னுடைய ஊர்” என்று ஏதேதோ புலம்பத் தொடங்குகிறாள். அவளது பெற்றோர் மதுரா என்ற பெயரை கூட அவள் காதுபட உச்சரித்ததில்லை. அப்படி இருக்கையில் ஒரு 4 வயது பெண் குழந்தைக்கு எப்படி மதுரா என்ற ஊர் இருப்பது தெரிந்தது என்று குழம்பிப்போயினர்.
சாந்தி தேவி தனது 6 ஆவது வயதில் திடீரென காணாமல் போனாள். அவளது பெற்றோர் சாந்தி தேவியை தேடி அலைந்தனர். எங்கிருந்தோ அவளை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். எங்கே போனாய் என்று சாந்தி தேவியிடம் அவளது பெற்றோர் கேட்டதற்கு “மதுராவுக்கு போகணும், அதனாலதான் வீட்ட விட்டு ஓடிப்போனேன்” என்று கூறியிருக்கிறாள். இது என்னடா ஒரே மர்மமா இருக்கு என்று பெற்றோர் பதற்றமடைந்தனர்.
சாந்தி தேவியை பள்ளியில் சேர்த்தபோது பள்ளியின் தலைமை ஆசிரியர் “உன் பெயர் என்ன?” என்று கேட்டதற்கு “என் பெயர் லுக்தி தேவி. நான் மதுராவைச் சேர்ந்தவள். எனது கணவரின் பெயர் கேதார் நாத். அவர் மதுராவில் வியாபாரம் செய்கிறார். எனக்கு ஒரு மகனும் இருக்கிறான்” என்று பதில் கூற தலைமை ஆசிரியருக்கு தூக்கிவாரி போட்டது. எனினும் சாந்தி தேவி பேசிய பாஷையில் மதுரா நகரவாசிகளின் பாஷை இருப்பதாக தலைமை ஆசிரியர் கண்டுபிடித்தார்.
ஆதலால் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அந்த தலைமை ஆசிரியர் மதுராவில் பலரையும் விசாரித்து கேதார் நாத் என்ற வியாபாரியை அழைத்து வந்தார். “இவர் கேதார் நாத்தின் சகோதரர்” என்று சாந்தி தேவிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் சாந்தி தேவியோ “இல்லை, இவர்தான் கேதர் நாத். எனது கணவர் இவர்தான்” என்று கூறினாள்.
இதனை கேட்டு கேதர் நாத்தும் குழம்பிப்போயிருக்கிறார். அதன் பிறகுதான் முற்பிறவியில் லுக்திதேவியாக தான் பிறந்ததாகவும் கேதார்நாத்தை திருமணம் செய்துகொண்ட பிறகு ஒரு ஆண் குழந்தை பிரசவித்தபோது நான் இறந்துவிட்டதாகவும் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் எனவும் கூறியிருக்கிறாள். கேதார் நாத்தும் “இந்த சிறுமி சொல்வது முற்றிலும் உண்மை, எனது முன்னாள் மனைவியின் பெயர் லுக்தி தேவிதான். அவள் ஆண் குழந்தையை பிரசவித்துவிட்டு இறந்துவிட்டாள்” என்று கூறியிருக்கிறார். மேலும் சாந்தி தேவி, லுக்தி தேவிக்கும் அவளது கணவன் கேதர் நாத்துக்கும் இடையே மட்டுமே தெரிந்த ஒரு ரகசியத்தை கூற, கேதார் நாத்திற்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயம் லுக்தி தேவியின் மறுபிறவிதான் சாந்தி தேவி என்று நம்பப்பட்டது.
இந்த மறுபிறவி கதை இந்தியா முழுக்க பரவ மகாத்மா காந்தியே நேரில் சென்று சாந்தி தேவியை சந்தித்து உண்மையை விசாரித்து மிரண்டுப் போயிருக்கிறார். தனது முற்பிறவியான லுக்தி தேவியாகவே வாழ்ந்து வந்த சாந்தி தேவி கடைசி வரை கேதார் நாத்தை நினைத்துக்கொண்டு திருமணமே செய்துகொள்ளாமல் 1987 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…