விஜய் டிவியில் சுவாரசியத்திற்கு தினம்தோறும் பஞ்சமில்லாமல் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மகாநதி. திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் இரவு 7 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி போன்ற சீரியல்களை இயக்கிய பிரவீன் பெண்ணட் இயக்கி வருகின்றார். 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் சுமார் 600 எபிசோடுகளை கலந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது மூன்று நாயகிகள் மற்றும் மூன்று கதாநாயகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த மூன்று பேரில் பலருடைய மனதையும் கொள்ளை கொண்டவர் லட்சுமி பிரியா. இவருக்கு ஜோடியாக சுவாமிநாதன் நடித்து வரும் நிலையில் விஜய் மற்றும் காவேரி கதாபாத்திரத்தில் இருவரும் நடித்து வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கங்கா மற்றும் குமரன் ஜோடியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்து யமுனா மற்றும் நிவின் ஜோடியும் பிரபலம்தான். யமுனாவாக ஆதிரை சௌந்தரராஜனும் நிவீன் கதாபாத்திரத்தில் ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படியான நிலையில் இந்த மூன்று கதாநாயகிகளில் ஒருவர் சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆதிரை இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
