தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 1, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகின்ற ஜூலை எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.