ரீல் டு ரியல் ஜோடி.. 4 வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை.. உடன் நடித்தவரையே 2-வது திருமணம் செய்து கொண்ட மகராசி சீரியல் நடிகை..!

By Mahalakshmi on ஆனி 14, 2024

Spread the love

நாதஸ்வரம் சீரியல் மூலமாக பிரபலமான நடிகை ஸ்ரீத்திகா இரண்டாவதாக ஆர்யன் என்பவரை திருமணம் செய்திருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாதஸ்வரம் சீரியல் மூலமாக மிகவும் பிரபலமான நடிகையாக மாறியவர் ஸ்ரீத்திகா. திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும் நடிகை ஸ்ரீத்திகா தனது எதார்த்தமான நடிப்பு மூலமாக ரசிகர்களை பெரும் அளவு கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

   

   

வெள்ளித்திறையில் திரைப்படங்கள் பெரிய அளவு கை கொடுக்காத காரணத்தினால் மீண்டும் சின்னத்திரையிலேயே நடிக்க தொடங்கி விட்டார். திருமுருகன் இயக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று சீரியல்களில் நடித்திருக்கின்றார். நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாணப்பரிசு போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி என்ற சீரியலில் நடித்திருந்தார்.

 

திருமுருகன் இயக்கத்தில் நடித்து வந்த போது இவருக்கும் திருமுருகனுக்கும் இடையே காதல் இருப்பதாக பல வதந்திகள் வெளிவந்தது .அதனை அவரே பொய் என்று மறுத்திருந்தார். பின்னர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே சனீஸ் என்பவரை கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

அதைத்தொடர்ந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிறந்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் சீரியலில் நடித்து வந்த ஸ்ரீத்திகா, மகராசி என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த ஆர்யன் என்பவரை தான் தற்போது கரம் பிடித்திருக்கின்றார். நடிகர் ஆர்யன் ஏற்கனவே நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரும் மூன்று வருடங்களுக்கு பின்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகராசி சீரியலில் ஆரியன் நிவேதிகா ஸ்ரீத்திகா மூவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஆரியன் நிவேதிகா பிரிவுக்கு பிறகு தற்போது ஸ்ரீத்திகா  ஆரியனை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்.

 

மேலும் இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீத்திகா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றார். இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்ட நிலையில் தற்போது இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று கூறி இருக்கின்றார்.