மனைவியுடன் புகைப்படத்தை வெளியிட்டு குட் நியூஸ் சொன்ன எருமசாணி புகழ் விஜய்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!

By admin on ஆனி 14, 2024

Spread the love

யூடியூபர்கள் இன்றைய காலகட்டத்தில் பாப்புலர் ஆகி விடுகின்றனர். அதில் சிலர் சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்கின்றனர். இவர் யூடியூபில் எரும சாணி என்ற சேனல் மூலமாக பிரபலமானார். ஹரிஜா உடன் விஜய் இணைந்து ஏராளமான வீடியோக்களை வெளியிடுவார். அந்த வீடியோக்கள் வைரலாகும்.

6 வருடமாக காதலித்து வந்த காதலியை கரம் பிடிக்கும் எருமசாணி விஜய்

   

அவரது வீடியோக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கோவையில் பிறந்தவர் விஜய். தனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளார். சினிமாவுக்குள் நுழைந்த விஜய் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். ஹிப்ஹாப் ஆதியுடன் இரண்டு படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

கோலாகலமாக நடந்த எருமசாணி விஜய் நக்ஷத்ரா மூர்த்தி திருமணம்,Eruma saani vijay nakshathra murthy marriage photos and videos

 

முன்னதாக சினிமாவுக்குள் நுழைந்த விஜய் அருள்நிதி நடித்த டி பிளாக் என்ற படத்தை இயக்கினார். அதில் பிரெண்ட் கதாபாத்திரத்திலும் நடித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் நக்ஷத்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

எருமசாணி புகழ் விஜய்க்கு திருமணம்! பெண் இவர்தான்.. ஜோடியின் போட்டோ இதோ

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். இந்த நிலையில் விஜய் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். மேலும் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், தாங்கள் பெற்றோராக போவதாக அறிவித்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் விஜய் நாக்ஷத்ரா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nakshatra Murthy (@nakshatra.murthy)