தமிழ்நாட்டில் தற்போதைய ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்’ பெயரை ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தினால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை, அதற்கான நிதி ஆதாரங்களைப் பெருக்கும் வழிகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
