BREAKING: விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.

இப்படியான நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை தமிழக அரசு தீவிர்படுத்தி உள்ள நிலையில் நாளை மறுநாள் ஜூலை 15 முதல் விண்ணப்ப பணிகள் தொடங்க உள்ளது. இதனிடையே விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு மாதங்களில் உரிமை தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு செப்டம்பரில் புதிய பயணங்களுக்கு பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.