சிறந்த பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை… தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு.. !

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

தமிழகத்தில் காமராஜரின் பிறந்த நாள் தினமான வருகின்ற ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் சிறந்த துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 25,000 ரூபாய், 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையை அரசு வழங்க உள்ளது. இந்த பள்ளிகளை தேர்வு செய்து அனுப்பும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், துவக்கப்பள்ளி இயக்குனர் நரேஷ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.