மாடலிங் துறையில் சாதிக்க நிறம் ஒரு தடை இல்லை என்று நிரூபித்தவர் தான் புதுச்சேரி அழகி சான் ரேச்சல். சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் ஊக்கத்தில் வளர்ந்த இவர் மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, குயின் ஆஃப் மெட்ராஸ் 2022 உள்ளிட்ட பல்வேறு அழகி போட்டிகளில் பட்டங்களை வாரி குவித்துள்ளார். தான் கேளிக்கும் அவமானத்துக்கும் ஆளான தன்னோட சொந்த ஊரான புதுச்சேரியிலேயே டைட்டில் வாங்கியதுதான் தன்னுடைய ஃபேவரைட் என்றும் அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
தனது நிறத்தால் வாழ்வில் பல சங்கடங்களை எதிர்கொண்ட இவர் தடை கற்களை படி கற்களாக மாற்றி மாடல் அழகியாக வலம் வந்தார். இப்படியான நிலையில் 26 வயதாகும் இவர் திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
