சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றிய விஜய், சிபிஐ என்பது ஆர் எஸ் எஸ் பாஜகவின் கை பாவையாக உள்ளது.
அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி என்பது எதற்கு? சாத்தான்குளம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது அவமானம் என்றால் அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்?, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கு உங்களுக்கு அவமானம் இல்லையா? இந்த ஆட்சி முடிவதற்குள் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்களுடன் என்று சரி செய்ய வைப்போம் என்று விஜய் சூளுரைத்துள்ளார்.
