மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான முக்கிய தகவல்…!

By Nanthini on ஐப்பசி 7, 2025

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுடைய பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில் பலருக்கும் இன்னும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது.

இதனால் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது.

   

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தீபாவளிக்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாகாது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.