மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 1, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுபவர் இறந்துவிட்டால் அவருடைய பெயரை திட்டத்திலிருந்து அதிகாரிகள் நீக்கிவிடுவார்கள். பிறகு ரேஷன் கார்டில் இருந்து அவரது பெயரை நீக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அந்த குடும்பத்தில் இருக்கும் தகுதியான பெண்கள் அதாவது 21 வயதானவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும். இறப்பு குறித்து தெரியப்படுத்தாவிட்டாலும் மாதாந்திர ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.