டாஸ்மாக் வழக்கில் எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
