ரஜினி அப்படி சொல்லும்போது… என்னை காரி துப்பியது போல இருக்கும்… யோகிபாபு ஓபன் டாக்..!!

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அழகும் மினுமினுக்கும் நிறமும் இருந்தால் மட்டும் தான் நடிக்க முடியும் என்ற மாயை நிலவி வரும் நிலையில் அது எல்லாம் பொய் நடிப்புக்கு திறமை மட்டுமே போதும் என்று அதில் ஜெயித்து காட்டியவர்கள் ஏராளம். அப்படி பலரையும் வியந்து பார்க்க வைத்த ஒரு நடிகர் தான் யோகி பாபு. சினிமாவில் கதாநாயகனாக நடிப்பவர்கள் எல்லாம் நிஜத்தில் அப்படி இருப்பது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் நாங்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்போம் என்று நிரூபிக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் யோகி பாபு.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கியவர் தான் யோகி பாபு. லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தான் தனது கலை பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படம் மூலம் தான் அறிமுகமானார். தற்போது அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

   

கடைசியாக போட் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து இவர் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. நானும் நெல்சனும் இருக்கும்போது வந்து ரஜினி கோலமாவு கோகிலா படத்தை நான்கு முறை பார்த்தேன் என்று சொல்வார். அதேபோல மண்டேலா பார்த்தேன் என்றும் சொல்லுவார். அவருக்கு என்னுடைய நடிப்பில் இந்த இரண்டு படங்கள் மிகவும் பிடிக்கும். அதே சமயம் நான் நடித்த இன்னும் சில படங்களை பார்த்துவிட்டு கொஞ்சம் அப்படி இருந்தது என்பார். எனக்கு உடனே ஐயையோ காரி துப்பி விட்டார் என்று தோன்றும்” என்று கூறியிருக்கிறார்.