தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மீண்டும் புக்கெட்டில் அவசர அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்த 156 பயணிகளையும் கீழே இறக்கி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விமானத்தில் இருந் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள். நேற்று குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
