‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடி அரங்கையே அதிர வைத்த விஜய் சேதுபதி பட நடிகை மடோனா.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on மே 12, 2024

Spread the love

2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா ஜெபாஸ்டின். பிரேமம் படத்தில் அனுபாமா உடன் சிறு பெண்ணாக நடித்த இவர் கடைசியில் நிவின் பாலியை திருமணம் செய்து கொள்வார். இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மடோனா தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

   

அதனைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின்னர் கவன், வானம் கொண்டட்டும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சினிமாவில் தொடக்கத்தில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர் சிறு வயதில் இருந்தே கர்நாடக இசை பயின்று இருக்கின்றார்.

   

 

சூர்யா டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய போது தான் இவருக்கு பிரேமம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது. தற்போது மடோனா ஜெபஸ்டின் மாதவனுடன் இணைந்து அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மடோனா செபாஸ்டின் நன்றாக பாடக்கூடியவர் என்பது தெரிந்த தகவலாக இருந்தாலும் பலரும் அவர் பாடி கேட்டதில்லை.

சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மடோனா ஜெபாஸ்டின் அந்நியன் படத்தில் வரும் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலை பாடியிருந்தார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக பாடி அரங்கையே அதிர வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by musiclove_cut (@musiclove_cut)