என் வாய்ஸ்லாம் நீ டிரை பண்ணாத… விக்ரம் வேதா ஷூட்டிங் ஸ்பாட்டில் மணிகண்டனிடம் நேரடியாக சொன்ன மாதவன்.!

By vinoth on ஆடி 5, 2024

Spread the love

ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் என தரமான படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகராக ஆகியுள்ளார் மணிகண்டன். இவர் நடிப்பில் கடைசியாக லவ்வர் என்ற திரைப்படம் வெளியானது. பிரபு ராம் இயக்கியுள்ள இப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு மற்றும் அருணாசலேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் குட்னைட் அளவுக்கு ஹிட்டாகவில்லை. இதையடுத்து மணிகண்டன் நக்கலைட்ஸ் குழு தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் பா ரஞ்சித் தயாரிப்பில் அம்பேத்கர் என்ற படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

   

மணிகண்டன் அறியப்பட்ட நடிகராக வருவதற்கு முன்பாக பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதில் ஜெய்பீம் மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் குறிப்பிட்டு சொல்லத்தக்கன, விக்ரம் வேதா படத்தின் ஷூட்டிங்கின் போது மணிகண்டன், நடிகர்களுக்கு வசனம் சொல்லித் தரும்போது அவர்களின் மாடுலேஷனிலேயே பேசி சொல்லித் தருவாராம். அதை விஜய் சேதுபதி வெகுவாக ரசித்தாராம்.

   

ஆனால் மாதவனிடம் மணிகண்டன், அப்படி சொல்லித் தந்த போது “நீ வசனம் மட்டும் சொல்லித்தந்தால் போதும். என் மாடுலேஷன் எல்லாம் ட்ரை பண்ணாத” என முகத்துக்கு நேராக சொல்லிவிட்டாராம். விக்ரம் வேதா படத்தில் மணிகண்டன் மாதவன் கூடவே வரும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரு நேர்காணலில் மணிகண்டனே பகிர்ந்துள்ளார்.