Connect with us

அமெரிக்காக் காரனிடம் தன்னுடைய ‘சின்னவீடு’ கதையை சொல்லி வியக்க வைத்த பாக்யராஜ்… அதுக்கு அவன் சொன்ன பதில்தான் ஹைலைட்டே!

CINEMA

அமெரிக்காக் காரனிடம் தன்னுடைய ‘சின்னவீடு’ கதையை சொல்லி வியக்க வைத்த பாக்யராஜ்… அதுக்கு அவன் சொன்ன பதில்தான் ஹைலைட்டே!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.

அவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னவீடு திரைப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த படம் அவரின் முந்தைய படங்கள் அளவுக்கு வெற்றி பெறவில்லை. காரணம் அந்த படத்தில் பாக்யராஜ் தன் மனைவியை விட்டு வேறொரு பெண்ணிடம் கள்ள உறவு வைத்துக் கொள்வது போல நடித்திருப்பார். அதுவரை பெண் ரசிகைகள் பாக்யராஜுக்கு அதிகளவில் இருந்தனர். ஆனால் இந்த படத்தில் பாக்யராஜின் வேடம் அப்படி இருந்ததால் அதிகம் பேர் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை.

   

ஆனாலும் இப்போது பார்த்தால் சின்னவீடு படம் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். அந்த அளவுக்கு நகைச்சுவையாக அந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் கதை உருவாக்கத்தின் போது ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தாராம். அப்போது தன்னுடைய உதவி இயக்குனரான ஜி எம் குமாரை தங்களுக்கு டாக்ஸி ஓட்டிய நபரிடம் சொல்ல சொன்னாராம்.

 

அவரும் சின்னவீடு படக் கதையை ஆங்கிலத்தில் அவருக்கு சொன்னாராம். அந்த கதையைக் கேட்டு வியந்த அந்த ஓட்டுனர் “இது அப்படியே என்னுடைய கதை போலவே உள்ளது. ஏன் இது மாதிரியெல்லாம் எங்கள் ஊரில் படம் எடுக்கப்படவில்லை” என வியந்து பாராட்டி பேசினாராம். இதை இயக்குனர் ஜி எம் குமார் சமீபத்தில் தான் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
To Top