அந்த படத்தின்போது சினேகாவுக்கு நடந்த ஆக்சிடென்ட்.. முதுகெலும்பு ஒடஞ்சி எழுந்திருக்க கூட முடியாம.. மனம் திறந்த ஸ்ரீகாந்த்..!

By Mahalakshmi on ஜூலை 5, 2024

Spread the love

ஏப்ரல் மாதம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கும் நடிகை சினேகாவுக்கும் ஏற்பட்டிருந்த விபத்து குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார் நடிகர் ஸ்ரீகாந்த்.

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். பார்ப்பதற்கு செம அழகாக இருந்த இவரை பலரும் ரசிக்க வந்தன. அதைத்தொடர்ந்து பார்த்திபன் கனவு, மனசெல்லாம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் தொடர்ந்து இவரால் முன்னணி ஹீரோக்களின் பட்டியல்களில் வர முடியவில்லை.

   

   

தற்போது வரை முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீகாந்த் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். நடிகர் விஜயுடன் சேர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது சத்தம் இன்றி முத்தம் தா, ஆபரேஷன், லைலா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

 

இவர் நடிகை சினேகா குறித்து சில விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் 20’ஸ் காலத்தில் படிக்க வந்தவர் தான் நடிகை சினேகா. 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலபட்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் மக்களால் அறியப்பட்டார். அந்த காலத்தில் முன்னணி ஹீரோக்களாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.

அதைத்தொடர்ந்து அச்சமில்லை அச்சமில்லை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகை பிரசன்னாவுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கின்றார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது விஜய் உடன் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினேகா பற்றி ஒரு சம்பவத்தை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது சினேகாவுடன் ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சினேகாவிற்கும் எனக்கும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இருவருமே மருத்துவமனையில் இருந்து வந்து தான் அந்த திரைப்படத்தில் நடித்தோம்.

என்னை விட சினேகாவிற்கு தான் அதிக விபத்து ஏற்பட்டது. சினேகாவின் கார் விபத்தில் சிக்கி அவரின் முதுகெலும்பு உடைந்து போனது. அவரைக் காப்பாற்றுவதற்காக கார் கதவுகளை திறக்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. கண்ணாடி எல்லாம் நொறுங்கி விட்டது. இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. மேலும் அந்த திரைப்படத்தில் அவரால் எழுந்து நிற்கவே முடியாது. பெரும்பாலான ஷர்ட்டுகள் உட்கார்ந்து கொண்டே இருப்பது போன்று தான் எடுத்திருப்பார்கள். மேலும் அவரை யாராவது தூக்கி வைத்தால்தான் முடியும் அந்த நிலைமைக்கு ஆளானார் சினேகா. இருப்பினும் அந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்து முடித்து விட்டார் என்று பேசியிருந்தார் ஸ்ரீகாந்த்.