விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பிரபலமானவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே பிரபலமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். திரை பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகளின் இல்ல திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் இவருடைய உணவு தான் பேமஸ். இவரை புக்கிங் செய்ய பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் செலவு செய்து புக் செய்கின்றனர். நீண்ட நாட்களாக இந்த துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக அறிமுகமானார். இருந்தாலும் அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைத்தளங்களில் கலந்து சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதேசமயம் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாயின் கிரிஸ்டில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிஸ்டில்டா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை மை மேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் திருமணம் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்தில் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். முதல் மனைவி இருக்கும் போது மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்தது எப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது ஒரு பரபரப்பு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் மனைவியான ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து பெறாத நிலையில் எவ்வாறு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கறிஞரான சுருதி மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அடிக்க இருப்பதாகவும் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் சிறை செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பல நாட்களுக்கு முன்பே ஜாய் கிரிஸில்டாவுக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் தாங்கள் திருமணம் செய்த பழைய புகைப்படங்களை ஜாய் கிறிஸ்டில்டா வெளியிட்டு தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என பொதுவெளியில் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உண்மை என்ன என்று தெரியாமல் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.
