வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களுமே உரிய நேரத்தில் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் கொண்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் 35,181 ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1527 ரேஷன் கடைகளும், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 152 ரேஷன் கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 468 ரேஷன் கடைகளும், என மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதிலும் செயல்படுகின்றன.
