திமுகவின் முன்னாள் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் தற்போதைய தீர்மான குழு செயலாளருமான எம்எஸ் விஸ்வநாதன் உடல் நலக்குறைவால் காலமானார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இவருடைய உயிர் பிரிந்த நிலையில் அரூர் கீரைப்பட்டி கிராமத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
