அடக்கடவுளே..! திருமணம் முடிந்த கையோடு அதிர்ச்சி கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜனின் 2ஆவது மனைவி… கடும் ஷாக்கில் ரசிகர்கள்..!!

By Soundarya on ஆடி 27, 2025

Spread the love

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பிரபலமானவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே பிரபலமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். திரை பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகளின் இல்ல திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் இவருடைய உணவு தான் பேமஸ்.  நீண்ட நாட்களாக  சமையல் துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக அறிமுகமானார்.

இருந்தாலும் அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைத்தளங்களில் கலந்து சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதேசமயம் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாயின் கிரிஸ்டில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

   

இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் திருமணம் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

   

 

View this post on Instagram

 

A post shared by J Joy (@joycrizildaa)