ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் உடல்நல பிரச்சனைகளால் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவன் நாகேந்திரன்(55), தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட மனைவி சுஜிதா(45), மனநலம் பாதிக்கப்பட்ட மகள்(20) மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். உடல்நிலை பாதிப்பு காரணம் என போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
