BREAKING: உத்தரகாண்ட் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.!!

By Soundarya on ஆடி 27, 2025

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மான்சா தேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர் என்று  தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலுக்கான  காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில், புனித ஷ்ரவண பருவம் காரணமாக கோவிலில் ஏராளமான கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது.