தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடைசியாக ரிலீஸ் ஆனது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக கலகலப்பு 3 திரைப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படம் உருவானது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து மதகதராஜா படத்தை தயாரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் நெருக்கமான வட்டாரத்திற்கு மட்டும் மதகஜராஜா படம் திரையிட்டு காட்டப்பட்டது.

படத்திற்கான வரவேற்பு நன்றாக இருந்ததால் வருகிற செப்டம்பர் மாதம் மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. சில சிக்கல்கள் காரணமாக மதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தனர். 11 வருட போராட்டத்திற்கு பிறகு படம் ரிலீசுக்கு தயாராகிறது. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்திற்கு சொந்தமாக சாலிகிராமத்தில் ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தில் தான் பிக் பஜார் இயங்குகிறது.

இந்நிலையில் அந்த இடத்தை அம்பானி வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்வான்ஸ் தொகையாக அம்பானி 200 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து தான் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்தினர் மதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர். எது எப்படியோ படம் விரைவில் ரிலீஸ் ஆகவேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது செம டிரீட்டாக அமைந்துள்ளது.
![]()
