உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வலிமை, துணிவு, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமானவர் எச்.வினோத். இவர் கமலின் 233 வது படத்தை இயக்க போவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அரசியல் சம்பந்தமான கதை களத்துடன் அந்த படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது. கமல்ஹாசன் தக் லைவ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எச்.வினோத்தும் தளபதி விஜயின் 69-ஆவது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கமலுக்காக உருவாக்கப்பட்ட கதையைத்தான் எச். வினோத் தளபதி 69- வது படத்திற்காக கூறி அனுமதி வாங்கி உள்ளார். கமலும் தன் தரப்பு சில ஐடியாக்களை சொல்லி தான் ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்டி உள்ளாராம்.

அதைத்தான் வினோத் ஃபாலோ செய்ய உள்ளார். புதுமையான கதை களத்தை தேர்ந்தெடுக்கும் விஜய் இந்த முறையும் வித்தியாசமாக அரசியல் கதை களத்துடன் திரையில் காட்சியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 69ஆவது படத்தின் கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

