இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்களே.. பாபநாசம் பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஜூலை 20, 2024

Spread the love

பாபநாசம் திரைப்படத்தில் குட்டி பெண்ணாக நடித்த எஸ்தர் அணில் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

பாபநாசம் திரைப்படத்தில் கமலஹாசன் கௌதமி ஆகியோரின் இளைய மகளாக நடித்து பிரபலமானவர் எஸ்தர் அணில். திரிஷ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் தான் பாபநாசம்.

   

 

இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியது ஜித்து ஜோசப். இப்படத்தில் எஸ்தர் அணில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர் சில வருடங்களிலேயே கடகடவென வளர்ந்து ஹீரோயினியாக மாறிவிட்டார்.

 

இதையடுத்து அவர் ஊளு என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினியாகவும் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இறக்கி வருகின்றார்.

 

அதிலும் ஓவர் கிளாமராக அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த நடிகையா இது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.