‘மச்சான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா’…  வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரிவைரவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த அப்பு குட்டி… வீடியோ இதோ…

By Begam

Published on:

‘வெண்ணிலா கபடி குழு’ நடிகரான ஹரிவைரவனின் மரணத்திற்கு நடிகர் அப்பு குட்டி இரங்கல் தெரிவித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஹரி வைரவன். இதைத் தொடர்ந்து அவர் நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார். இவர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கடந்த பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

   

சமீபத்தில் அவரும் அவரது மனைவியும் இணைந்து கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்றைய தினம் அவர் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகர் அப்பு குட்டி இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வெண்ணிலா கபடிக் குழு வைரவன் இன்று எங்க கூட இல்லை, இப்படம் நாங்க எல்லாரும் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில நாங்க நடிச்சோம், நினைச்ச மாதிரியே நம்ம எல்லாருக்கும் நல்ல பேர் கிடைச்சது. இன்னும் அதிகமாக ஜெயிப்போம் என யோசிச்சிட்டு இருந்த ஒருத்தர் இன்றைக்கு நம்மள விட்டு போய்விட்டார் என்பதை நினைக்கும் போது ரொம்பவே வருத்தமாக இருக்கு.

அதேபோல குள்ளநரி கூட்டம் படத்தில் அவர் கூட ஒர்க் பண்ணினதை மறக்கவே முடியாது. வைரவனோட அன்பு மறக்கவே முடியாது. எதுவாக இருந்தாலும் அவன் விளையாட்டுத் தனத்தோட இருப்பான், கோபம் வந்தால் கோபத்தை நேரடியாகவே காட்டுவான், அப்படியான ஒரு நண்பர். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட அவங்க வீட்டில பேசினேன்.

அவுங்க மனைவி ‘நடக்க மட்டும் தான் முடியாது ஆனால் ரொம்பத் தெம்பாக இருக்கார்’ என்று கூறினார். நானும் கண்டிப்பா அவர் திரும்பி வந்திடுவார் என்று நினச்சேன்’ என்று தனது இரங்கலை இந்த வீடியோவில் அவர் பதிவு செய்துள்ளார்.

வைரலாகும் வீடியோ இதோ…